காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் 3 நாட்கள் நடந்த மோதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினான். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதி தப்பிச் செல்ல, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்கினர். இதனால் அவனைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து நடந்த தாக்குதலில் அந்தத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். விசாரணையில் அவன் பெயர் சஜாத் ஆஃப்கானி என்பதும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தில் முக்கிய கமாண்டர் என்பதும் தெரியவந்தது.