மகாராஷ்ட்ராவில் நேற்றும் ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் நாக்புர் மற்றும் லத்தூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. நாக்பூரில் புதிதாக இரண்டாயிரத்து 252 போரும் லத்தூரில் புதிதாக 110 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நாசிக்கிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே புனே, நவி மும்பை , பான்வெல், தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியதைத் தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.