உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர் கைது செய்யப்பட்டது போன்றதொரு சம்பவம் காசியாபாத்தில் தற்போது நடந்துள்ளது.
காசியாபாத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சமைக்க வந்த மோசின் என்ற நபர், தந்தூரி ரொட்டி செய்யும் போது அதன் மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அந்த சமையல்காரரை தேடி வந்தனர். இந்த நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.