வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களது போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதை காட்டும் வகையில், விவசாயிகள் டெல்லி எல்லையில் நிரந்தர வீடுகளை கட்ட துவங்கி உள்ளனர்.
அதன்படி, அரியானாவையும், டெல்லியையும் பிரிக்கும் திக்ரி எல்லையில், 25 வீடுகளை விவசாயிகள் கட்டி முடித்துள்ளனர். கடுங்குளிர், இணைய-மின் துண்டிப்பு உள்ளிட்ட பலவேறு தடைகளை தாண்டி விவசாயிகள் நடத்தும் போராட்டம் 110ஆவது நாளை நெருங்கி உள்ளது. இந்த நிலையில், செங்கல்களால் ஆன வீடுகளை விவசாயிகள் கட்டியுள்ளனர்.
இந்த கட்டுமானத்திற்கான மூலப்பொருட்களை மட்டுமே அவர்கள் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள் அந்த வீடுகளை எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை 25 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இனியும் 2000 வீடுகள் கட்டப்படும் என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.