திமுக வின் ஊழல்களை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார்.
ஊழல்கள் மலிந்த மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தது திமுக என்றும் நட்டா தெரிவித்தார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டியளித்த நட்டா, தமிழக மக்கள் அதிமுக -பாஜக-பாமக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் மோடி அறிவித்த பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறந்த முறையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் நட்டா கூறினார்.
அடித்தட்டு மக்கள் வரை தமிழக அரசு பணியாற்றி வருவதாகவும் பேரிடர் கால நிவாரண நிதி கடைசி நபர் வரை போய் சேர்ந்திருப்பதாகவும் நட்டா தெரிவித்தார்.