பெங்களூரில் தாக்கப்பட்டதாகப் புகார் அளித்த பெண்ணே தன்னைத் தாக்கியதாகவும், அவரது மோதிரம் பட்டதாலேயே மூக்குடைந்து ரத்தம் வந்ததாகவும் சோமட்டோ ஊழியர் தெரிவித்துள்ளார்.
சோமட்டோவில் ஆர்டர் செய்த உணவைத் தாமதமாகக் கொண்டுவந்தது குறித்துக் கேட்டபோது ஊழியர் தன்னைத் தாக்கியதாகக் கூறி ஹிதேச சந்திரானீ என்கிற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து சோமட்டோ ஊழியர் காமராஜிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
உணவுக்கான பணத்தைத் தர அந்தப் பெண் மறுத்ததாகவும், ஆர்டரை ரத்து செய்துவிட்டதாகத் தகவல் வந்ததால் உணவைத் திரும்பக் கேட்டபோது அதற்கும் அவர் மறுத்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் தன்னை ஏசியதுடன் செருப்பால் அடித்ததாகவும், அவரது கைவிரல் மோதிரம் தவறுதலாகப் பட்டதிலேயே மூக்குடைந்து ரத்தம் வந்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளார்.