உப்புச் சத்தியாக்கிரகத்தின் 91ஆம் ஆண்டு விழாவையொட்டி சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி நூல்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புக்கு வரி விதித்ததைக் கண்டித்து 1930ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி என்னுமிகாந்தியடிகள் நடைப் பயணத்தைத் தொடங்கினார். அதன் 91ஆம் ஆண்டு விழாவையொட்டி சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, காந்தி சிலைக்கு நூல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தியின் படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். தண்டி யாத்திரையை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவில் இசைக்கலைஞர்கள் தேசபக்திப் பாடல்கள், பல்சமயப் பாடல்களைப் பாடினர். நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.