நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு கோடி செக் மோசடி வழக்குகளை விசாரிக்க, கூடுதல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
செக்' மோசடி வழக்குகள் தேக்கம் குறித்து, தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கவும் ஆலோசனைக் குழு அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தந்தது. இதையடுத்து செக் மோசடி வழக்குகளுக்குத் தீர்வு காண எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கு, மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, ஆர்.சி.சவுகான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.