மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்து வரும் போது தாம் தாக்கப்பட்டதாகவும் நான்கு பேர் தம்மிடம் முரட்டுத் தனமாக நடந்துக் கொண்டனர் என்றும் புகார் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கட்டு MRI ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்காக மமதா அங்குள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார்
மமதா பானர்ஜியை அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனிடையே மமதாவின் ஆதரவாளர்கள் ஆளுநரே திரும்பிப் போ என கோஷமிட்டனர்
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தமது பிரச்சாரத்தை பாதியில் முடித்துக் கொண்டு மமதா கொல்கத்தா திரும்புகிறார்.
மமதாவுக்கு காயம் என்பது வெற்று நாடகம் என பாஜக விமர்சித்துள்ளது. அவர் கார் கதவு இடித்து காயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து போலீசார் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.