இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து, இந்தியா அணிகள் தகுதிபெற்றுள்ளன. இறுதி ஆட்டத்தை எங்கு நடத்துவது எனப் பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள் விவாதித்தனர்.
அதன் முடிவில் இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போட்டியைக் காண வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் ரசிகர்களை அனுமதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.