கேரள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ (P C Chacko) திடீரென, கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
திருச்சூர் முன்னாள் எம்.பி.யான பி.சி.சாக்கோ, டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார்.
மேலும், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட சாக்கோ, ஆலோசனை குழுவிலும் இடம்பெற்றிருந்தவர்.
இந்நிலையில், கேரள காங்கிரஸ் கமிட்டியில், சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு நிலவும் கோஷ்டி பூசல், தன்னை ராஜினாமா முடிவெடுக்க வைத்துவிட்டதாகவும், பி.சி.சாக்கோ தெரிவித்திருக்கிறார்.