அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன், தரிசனத்திற்காக டெல்லியில் உள்ள முதியவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை நிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் தாம் ராமர் மற்றும் அனுமருக்கு பக்தர் என்றும் ராமராஜ்யத்தை பின்பற்றி உணவு, கல்வி, பெண்பாதுகாப்பு உள்ளிட்ட 10 கொள்கைகளுடன், டெல்லி மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.