உத்தரகாண்ட்டில் கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான மகாசிவராத்திரியையொட்டி கங்கை நதியில் புனித நீராட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்தாண்டு நடைபெறும் மகாசிவராத்திரி, முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்து, ஹரித்துவார் நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
மகாசிவராத்திரி விழாவுக்கு பின் ஏப்ரல் 12, 14 மற்றும் 27ம் தேதிகளிலும் கங்கை நதியில் பக்தர்கள் நீராடலாம் என்று தெரிவித்துள்ள கும்பமேளா நிர்வாகம், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.