உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக பாஜக எம்பி திரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து நேற்று அவர் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், டேராடூனில் பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தற்போது எம்பியாக இருக்கும் திரத் சிங் ராவத் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதாக ராஜினாமா செய்த முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்தார்.
உத்தரகாண்ட் மாநில அமைச்சராக இருக்கும் தன்சிங் ராவத் புதிய முதலமைச்சராவார் என முன்னர் தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக திரத் சிங் ராவத் பதவியை கைப்பற்றி உள்ளார்.