மேற்கு வங்கக் காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியில் இருந்து வீரேந்திரா நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் புதிதாக நீரஜ்நயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு குறித்துத் தேர்தல் பார்வையாளர்கள் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தனர்.
அதில் வீரேந்திரா நடுநிலை தவறிச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியதால் அவரை அந்தப் பதவியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
தேர்தல் தொடர்பான எந்தப் பணியும் அவருக்கு வழங்கக் கூடாது என்றும் மாநிலத் தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் சென்னை வருமானவரி இணை ஆணையர் பதவியில் இருந்து அருண்ராஜையும், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து கண்ணனையும் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.