கேரளாவில் கைதிகளின் மன உளைச்சலை போக்கும் வகையில் சிறையில் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்ததை அடுத்து மாநில சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ்சிங் அதிரடி ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் முடிவில் கைதிகளில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விடுமுறை நாட்களில் சிறையில் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்ப அவர் உத்தரவிட்டுள்ளார்.