உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்கு 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்புதலை விமானநிலைய ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அயோத்தியில் கட்டப்பட உள்ள விமான நிலையம் அங்கு எழுப்பப்படவுள்ள ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட விமான நிலையப் பணிகளுக்கு சுமார் 270 ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.