லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது உள்ளிட்ட 42 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கு நடுவே ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 635 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 42 தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த இயக்கங்களுக்கு எல்லை தாண்டிய நிதியுதவி கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.