புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், தனித்துப் போட்டியிடுவதாக, அம்மாநில பா.ம.கவின் செயற்குழு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களுக்கிடையே தொகுதி பங்கீடு செய்தன.
ஆனால், கூட்டணியில் உள்ள பாமகவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால், உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி விவாதித்த புதுச்சேரி பாமகவினர், கூட்டணியில் இருந்து விலகலாம் என தீர்மானம் இயற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.