உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் உத்தரகாண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பதவி விலகி இருக்கிறார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 4 ஆண்டுகள் முதலமைச்சராக சேவையாற்ற தனக்கு பாஜக தலைமை பொன்னான வாய்ப்பை அளித்ததாக கூறினார்.
தற்போது வேறு ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த கட்சி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். திரிவேந்திர சிங் ராவத் மீது பாஜக எம்எல்ஏக்கள் பலர் குற்றச்சாட்டு எழுப்பியதால், கட்சி மேலிடம் உத்தரகாண்டிற்கு பார்வையாளர்களை அனுப்பி நிலவரத்தை கேட்டறிந்தது.
அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை திரிவேந்திர சிங் ராவத் சந்தித்துப் பேசியிருந்த நிலையில் தற்போது பதவி விலகியுள்ளார்.