பீகார் மாநிலத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சகாரியா மாவட்டத்தின் சாண்டி டோலா என்ற இடத்தில் ஆரம்பப் பள்ளி அருகே வடிகால் கட்டும் பணிகள் நடந்து வந்தன. அதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளியைச் சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போதும், 6 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஜேசிபி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.