இந்தியா வங்காளதேசம் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இன்று நண்பகல் 12 மணிக்கு இரு நாட்டு எல்லைகளை இணைக்கக்கூடிய ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை மோடி பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.சுமார் 2 கிலோமீட்டர் நீளம் உடைய இந்தப் பாலம் 133 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் சப்ரூம் பகுதியில் இருந்து வங்காள தேசத்தின் ராம்கர் இப்பாலத்தால் இணைக்கப்படுகிறது.இதனால் பயணிகள் போக்குவரத்தும் சரக்குப் போக்குவரத்தும் எளிதாகும். மேலும் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நெடுஞ்சாலைக் கட்டுமானத் திட்டங்களுக்கும் இன்று பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.