மத்திய பிரதேசத்தில் பெண் காவலர் ஒருவருக்கு, இன்று ஒரு நாள் மட்டும் மாநில உள்துறை அமைச்சர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு தனது பதவியை பெண் காவலர் மீனாட்சிக்கு அளித்துள்ளதாக மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.