நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலங்களவையில் பேசிய சிவசேனா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான மசோதா கொண்டுவரப்பட்டு 24 ஆண்டுகள் ஆவதாகத் தெரிவித்தார்.
அதை ஐம்பது விழுக்காடாக உயர்த்தி நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பவுசியா கானும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.