உலக மகளிர் நாளையொட்டி டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திக்ரி, சிங்கு, காசிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகப் பல துறைகளைச் சேர்ந்த பெண்களும் போராட்டங்களில் அவ்வப்போது பங்கேற்றனர்.
வேளாண்துறையிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் பங்களிப்பு உள்ளது. இந்நிலையில் உலக மகளிர்நாளையொட்டிப் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் டெல்லி எல்லைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.