பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 விழுக்காடு உயர்ந்ததன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்துள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 20 விழுக்காடு உயர்ந்து 70 டாலர் 77 சென்ட்களாக உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை 6 விழுக்காடு வரை உயர்ந்தது.
காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 560 புள்ளிகள் உயர்ந்து ஐம்பதாயிரத்து 965ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 155 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 93 ஆக இருந்தது.