3 புதிய வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
5 வது தேசிய உடன்படிக்கை மாநாட்டில் பேசிய அவர், விவசாய சங்கங்களுடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளதாகவும் கூறினார்.
12 முதல் 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைப்பது, பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் குழுவை அமைப்பது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கியதாகவும் ஆனால் அவைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்தன என்று தோமர் தெரிவித்தார்.