பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றைத் தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுத்துறையைச் சேர்ந்த இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
பொதுத்துறையில் உள்ள 13 வங்கிகளை 5 வங்கிகளாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் பொதுத்துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றைத் தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.