கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய கடித த்தில், தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமரின் படத்தை நீக்க வேண்டுமென கூறியிருந்தது.
இதையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும் என்று தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்க மாநில அரசுகளுக்கும், புதுச்சேரி அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.