பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் இம்ரான் கான் அரசு தப்பியது.
செனட் தேர்தலில், இம்ரான் கானால் முன்னிறுத்தப்பட்ட நிதியமைச்சர் அப்துல் ஹபீஸ் ஷேக், முன்னாள் பிரதமர் யூசூப் ராசா கிலானியால் தோற்கடிக்கப்பட்டார். இதையடுத்து, இம்ரான் கான் அரசு பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதிபர் ஆரிஃப் ஆல்வி(Arif Alvi) உத்தரவை ஏற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இம்ரான் கான் வெற்றிப்பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தன. மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில், 178 எம்.பிக்களின் ஆதரவை பெற்றதால், இம்ரான்கான் அரசு தப்பியது.