நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மனைவி காஞ்சன் கட்கரியுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பெங்களூரில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவும், டெல்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதேபோல, இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில், திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.