வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் வர வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அடையாள அட்டையில் சிறிய தவறுகள் இருந்தாலும், அது பெரிதுபடுத்தப்படாமல், தேர்தல் அதிகாரிகளின் ஒப்புதலுடன் வாக்களிக்கலாம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், அரசு வழங்கும் 7 விதமான அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
அதன்படி ஆதார், வங்கி அல்லது அஞ்சலக பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
அது போன்று இந்த முறை, வாக்காளர்களுக்கு, புகைப்பட அடையாள சிலிப் வழங்குவதற்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சிலிப் வழங்கப்படும்.