மராட்டிய மாநிலத்தில் நக்சல் அமைப்பினருக்குச் சொந்தமான துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் தகர்த்தனர்.
நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள கட்சிரொலி (Gadchiroli) மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி தொழிற்சாலை இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 70 கமாண்டோ படை போலீசார் துப்பாக்கி தொழிற்சாலையை சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கிருந்த நக்சல்பாரிகள் கமாண்டோகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடினர். இதில் கமாண்டோ படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
2 நாட்களாக தொழிற்சாலையை சோதனையிட்ட கமாண்டோ போலீசார் பின்னர் தொழிற்சாலையை இடித்து தரைமட்டமாக்கினர்.