தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம் அருகே வெடிகுண்டு பொருட்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரோன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரது உடல் மும்பையை அடுத்த தானேயில் உள்ள ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளுடன் கைப்பற்றப்பட்ட காரின் உரிமையாளரான மன்சுக் ஓராண்டு காலமாக காரை தாம் பயன்படுத்தவில்லை என்று விசாரணையில் கூறியிருந்தார்.
காரை விட்டுச் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் காரின் உரிமையாளரான மன்சுக்கை காணவில்லை என்று அவர் குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இந்த வழக்கு தீவிரவாதத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.