பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜெண்ட் சங்க தலைவர் சென்னாரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி ஆகியோர், மத்திய அரசு உடனடியாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
15 ஆண்டுகள் இயங்கிய வாகனங்களை இயக்கக்கூடாது என்ற திட்டம் கைவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். காப்பீட்டு தொகையை 1250 ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் என்ற அவர்கள், இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறினால் வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்றனர்.