புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதனை செய்து உள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ரஷியாவுடன் இணைந்து திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை (எஸ்எப்டிஆர்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் ஏவுகணையை ஏவி பரிசோதிக்கப்பட்டது. திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இன்றைய சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் மோட்டார் உள்ளிட்ட அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.