உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காணொலிக் கருத்தரங்கில் பேசிய அவர், உற்பத்தியின் அளவையும் வேகத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது அதற்கேற்றாற்போல் வேலைவாய்ப்பும் அதிகரிப்பதாகத் தெரிவித்தார்.
தொழில் நடத்த உகந்த சூழலை அரசு உருவாக்குவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
உலக அளவில் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
வாகனத் தொழில், மருந்து உற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி, உருக்கு, துணி, உணவுப் பதப்படுத்தல் உள்ளிட்ட 13 பிரிவுகள் உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்புத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.