குஜராத்தில் வலையில் சிக்கிய சிங்கக் குட்டியை வனத்துறை ஊழியர் ஒருவர் வெறும் கையால் பிடித்து காப்பாற்றியுள்ளார்.
ரஜூலா பகுதியில் உள்ள கிர் வனப்பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிக்குள் சிங்கங்கள் வருவதைத் தடுக்க வலை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த வலையில் சிக்கிக் கொண்ட சிங்கக்குட்டி உயிருக்குப் போராடியது.
இதையறிந்த வனத்துறையினர் சிங்கக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர் ஒருவர், திடீரென சிங்கக் குட்டியின் மீது பாய்ந்து அதனை கட்டிப்பிடித்துக் கொண்டார்.
பின்னர் வலையிலிருந்து மீட்கப்பட்ட சிங்கக் குட்டி காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது.