இந்திய இராணுவம் முதல் முறையாக சமூக வானொலி நிலையத்தை வடக்கு காஷ்மீரின் சோப்பூர் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரேடியோ சினார் (90.4) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வானொலி நிலையம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் இணைப்பை புதுப்பிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது ஒரு சமூக உரையாடலுக்கான ஒரு நல்ல தளத்தை வழங்கும் என்றும், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்டர்நெட் ரேடியோ போன்ற சமூக ஊடக தளங்களிலும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.