மக்கள் தயக்கமின்றி கொரோனாவுக்காக கோவாக்ஸின் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் உள்நாட்டுத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை தயக்கமில்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
3ம் கட்ட சோதனையின் முடிவுகள் வருவதில் ஏற்பட்ட தாமதத்தினால் கோவாக்ஸினை எடுத்துக் கொள்ள மக்கள் தயங்கியதாகக் கூறிய பினராயி விஜயன், கோவாக்ஸின் தற்போது 81 விழுக்காடு செயல் திறனைக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.