சீரம் இந்தியா, பாரத் பயோடெக் இரண்டு நிறுவனங்களுக்கும் கூடுதல் தடுப்பூசி உற்பத்தித் திறன் இருக்கும் போது, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது ஏன் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் வினவியுள்ளது.
இந்த நிறுவனங்களின் முழு உற்பத்தித் திறனும் ஏன் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், எந்த கோட்பாட்டின் அடிப்படையில் 60 வயது மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு இப்போது தடுப்பூசி போடப்படுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
நமது மக்கள் பலருக்கு தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு இலவசமாகவும், விலைக்கும் தடுப்பூசியை அனுப்புவதாகவும் நீதிபதிகள் விமர்சித்தனர். இந்திய பார் கவுன்சில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் நீதிமன்றம் இவ்வாறு வினவியது.