சமூக ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் வெளியாகும் வீடியோ காட்சிகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றில் ஆபாசம் தலைவிரித்தாடுவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கலையின் சுதந்திரம் பெயரால் இவை வரையறை செய்யப்படாமல் தணிக்கை செய்யப்படாமல் வெளியாகின்றன.
படைப்பு சுதந்திரம், மற்றும் அரசு கண்காணிப்பை சமன் செய்யும் வகையில் புதிய செயல்திட்டங்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்று இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது மத்திய அரசின் வழிகாட்டல்கள் என்ன என்பதை தாக்கல் செய்யுமாறு அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்