சமூகவலைதளங்களில் வெறுப்பை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீதான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மும்பை வழக்கறிஞர் ஒருவர் அளித்த தனிநபர் புகாரின் அடிப்படையில் இந்த இருவரின் மீதும் விசாரணை நடத்த கடந்த அக்டோபரில் மும்பை புறநகர் போலீசாருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதீமன்றம் விதித்த கெடுவை தாண்டி தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, அடுத்த மாதம் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.