குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்திய ஆட்சிப்பணி, வெளியுறவுப் பணி, காவல் பணி உள்ளிட்ட 19 வகை பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வு ஜூன் 27ஆம் நாளில் நடத்தப்பட உள்ளது.
இதற்கு https://upsconline.nic.in என்கிற யுபிஎஸ்சியின் இணையத்தளத்தில் மார்ச் 24ஆம் நாள் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2021 ஆகஸ்டு முதல் நாளில் 21 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இதற்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.
சென்னை உட்பட நாட்டின் 24 நகரங்களில் முதன்மைத் தேர்வு நடைபெறும்.