நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 8.5 சதவீதமாகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வரிகள் வாரியத்தின் இந்த அறிவிப்பு 6 கோடி சந்தாதாரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், டிசம்பர் வரையிலான காலகட்டம் வரை சுமார் 2 கோடி பேர் இபிஎப்ஒ கணக்கில் இருந்து 73 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.