கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் போது 81 சதவீதம் பயனுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவாக்சின் எனும் உள்நாட்டுத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
சுமார் 27 ஆயிரம் பேரிடம் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பரிசோதனையின் விவரம் நேற்று வெளியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா இரண்டாவது டோஸ் மருந்து செலுத்திக் கொண்ட 81 சதவீதம் பேருக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசிகளைப் போட மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த உத்தரவை தனியார் மருத்துவமனைகள் வரவேற்றுள்ளன.