புதுச்சேரியில் கூட்டணி அமைப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து வருவதாகவும் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி முன்னாள் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், காங்கிரசில் இருந்து விலகி ரங்கசாமி முன்னிலையில் என்ஆர் காங்கிரசில் சேர்ந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, தேர்தலில் தனித்துப் போட்டியா, பாஜகவுடன் கூட்டணியா என இன்னும் முடிவாகவில்லை என்றார்.