மோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு காரணமாக இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள Rajiv Gandhi Institute of Development Studies மையத்தில் காணொலிக் காட்சி மூலம் பேசிய அவர், மாநிலங்கள் அதிகப்படியாக கடன் வாங்குவதால் மத்திய அரசின் பொது நிதி சீர்குலைந்து வருவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டார். மாநில அரசுகளுடன், மத்திய அரசு கலந்தாலோசிப்பதில்லை என்று கூறிய மன்மோகன் சிங், 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நாட்டை சீர்குலைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.