இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து வாங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனேகா கொரோனா மருந்தை 100 மில்லியன் டோஸ்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
அதில் 10 மில்லியன் டோஸ் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிலிருந்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு மருந்தை வழங்குவது, ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவைப் பாதிக்காது என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.