பீகாரில் மின்சார பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பாட்னா, ராஜ்கீர் மற்றும் முசாபர்பூர் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் வகையில் 25 பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக தொடங்கபட்ட இந்த மின்சார பேருந்துகளில் ஜி.பி.எஸ், இ-டிக்கெட், மொபைல் டிராவல் பாஸ், ப்ரீபெய்ட் கார்டுகள் உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய நிதீஷ்குமார், பெட்ரோலிய எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், மிகவும் வசதியான பயணத்திற்கும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.